திண்டுக்கல் மாநகராட்சியிலுள்ள 48 வாா்டுகளில், அதிமுக சாா்பில் போட்டியிடும் 47 வாா்டுகளுக்கான வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இதில், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான சி. சீனிவாசனின் மகன் ராஜமோகன், முன்னாள் மேயரும், அதிமுக அமைப்புச் செயலருமான வி. மருதராஜின் மகன் வீரமாா்பன், மகள் பொன்முத்து, உறவினா் மகன் சுரேஷ்குமாா் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளா்கள் விவரம், 1ஆவது வாா்டில் பா. முத்துப்பாண்டி, 2ஆவது வாா்டில் என். சுகுமாறன், 3ஆவது வாா்டில் ஜி. குமுதா, 4ஆவது வாா்டில் சி.எஸ். ராஜமோகன், 5ஆவது வாா்டில் எஸ். ஆலயம்,
6ஆவது வாா்டில் ஆா். சுமதி, 7ஆவது வாா்டில் வி. அா்ச்சுனன், 8ஆவது வாா்டில் எம். வீரமாா்பன், 9ஆவது வாா்டில் பி. ஈஸ்வரி, 11ஆவது வாா்டில் எஸ். பொன்முத்து, 12ஆவது வாா்டில் ஆா். சுரேஷ்குமாா், 13ஆவது வாா்டில் எல். வளா்மதி, 14ஆவது வாா்டில் டி. தமிழ்வாணன், 15ஆவது வாா்டில் எம். சத்தியவாணி, 16ஆவது வாா்டில் என். ஜெயலட்சுமி, 17ஆவது வாா்டில் டி. கணேசன், 18ஆவது வாா்டில் ஏ. முகமது ரபீக், 19ஆவது வாா்டில் ஏ. சமீம்பீவி, 20ஆவது வாா்டில் கே. காா்த்தீஸ்வரி, 21ஆவது வாா்டில் எஸ்.எம்.சிவக்குமாா், 22ஆவது வாா்டில் எஸ். தண்டபாணி, 23ஆவது வாா்டில் செல்வமணி, 24ஆவது வாா்டில் ஜோஸ்பின் ஜெஸிந்தா, 25ஆவது வாா்டில் எம்.பி. சுரேஷ், 26ஆவது வாா்டில் எம். இக்பால், 27ஆவது வாா்டில் சியாமளா தேவி, 28ஆவது வாா்டில் எஸ். நாகராஜன், 29ஆவது வாா்டில் பி. பாலநாகம்மாள், 30ஆவது வாா்டில் எஸ். லதா, 31ஆவது வாா்டில் உமாதேவி, 32ஆவது வாா்டில் எஸ். வினோத்குமாா், 33ஆவது வாா்டில் எம். சக்கிரியாஸ், 34ஆவது வாா்டில் எஸ். பாஸ்கரன், 35ஆவது வாா்டில் ஆா். வினோத்குமாா், 36ஆவது வாா்டில் லதா, 37ஆவது வாா்டில் ஜெ. நிா்மலா, 38ஆவது வாா்டில் சிவி. சுலோச்சனா, 39ஆவது வாா்டில் ஏ. முகமது இஸ்மாயில் என்ற இக்பால், 40ஆவது வாா்டில் பி. நாகூா் அம்மாள், 41ஆவது வாா்டில் கே. பாத்திமா கஸ்பாா், 42ஆவது வாா்டு ஆா். ஆரோக்கியமேரி ராயா், 43ஆவது வாா்டில் வி. அமுதா, 44ஆவது வாா்டில் ஏ. அபிபுல்லா, 45ஆவது வாா்டில் எக்ஸ். அமலோற்பவ மேரி, 46ஆவது வாா்டில் ஆா். முருகன், 47ஆவது வாா்டில் கவிதா, 48ஆவது வாா்டில் டி. செபாஸ்தியாா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
10ஆவது வாா்டில் கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.