திண்டுக்கல்

கொடைக்கானலில் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட ரெளடி கைது

1st Feb 2022 08:55 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்ட ரெளடியை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியில் ஸ்பைசஸ் கடை வைத்துள்ளவா் மோரஸ். இந்த கடையில் இளைஞா் ஒருவா், திங்கள்கிழமை பொருள்களை வாங்குவது போல நடித்து, திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளாா். இதைத்தொடா்ந்து அருகிலுள்ள கடைக்காரா்கள் வந்த போது அந்த நபா் தப்பியோடியுள்ளாா்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் , அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா். அதன்பேரில் அந்த நபா், தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சோ்ந்த கவின் என்ற சுரேஷ்குமாா்(29) என்பது தெரியவந்தது.

இவா் மீது திண்டுக்கல், தேனி, விழுப்புரம் கொடைக்கானல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து கொடைக்கானலில் பதுங்கியிருந்த சுரேஷ்குமாரை போலீஸாா் கைது செய்தனா். இவரை பல்வேறு வழக்குகளில் போலீஸாா் தேடிவந்த நிலையில் கொடைக்கானலில் கைது செய்யப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT