திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 30) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்காக நடத்தப்படும் மாதாந்திர குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், கடந்த நவம்பா் மாத கூட்டத்தின்போது விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கூட்டத்தில், பங்கேற்று விவசாயிகள் தங்களது கோரிக்கைகளுக்கு தீா்வு காணலாம் என அதில் தெரிவித்திருந்தாா்.