பழனியில் ஜி.கே.வாசன் பிறந்தநாளை முன்னிட்டு கட்சியினா் மலைக்கோயிலில் தங்கத்தோ் இழுத்து சிறப்பு பூஜைகள் செய்தனா்.
பழனியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசனின் பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை பழனி மலைக்கோயிலில் தங்கரதம் இழுத்து வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மூலவா் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அா்ச்சனைகள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு உறுப்பினரும், நகராட்சி வழக்கறிஞருமான மணிகண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் சண்முகநாதன், கனகசபாபதி வட்டாரத் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சுந்தரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் என்.எஸ்.வி.சித்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் தண்டபாணி, மாநில செயலாளா் திருஞானசம்பந்தம் உள்ளிட்ட ஏராளமானோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.