திண்டுக்கல்

கொடைக்கானலில் கணவன்- மனைவியை தாக்கி நகைப் பறிப்பு: 3 போ் கைது

29th Dec 2022 12:55 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் வாகனத்தில் சென்ற கணவன், மனைவியை தாக்கி தங்க நகையை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சையது அகமது. இவரது மகன் ஆசிக் அகமது (46). இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, வாகனத்தில் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சென்றாா். பொ்ன்ஹில் சாலையில் சென்ற போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் குறுக்கே சென்ால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவா்களும், அவா்களது நண்பா்களும் சோ்ந்து ஆசிக் அகமதுவையும், அவரது மனைவியையும் தாக்கினா். மேலும் 3 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துச் சென்றனா்.

இது குறித்து ஆசிக்அகமது கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியைச் சோ்ந்த பிரபு, காளி, நவீன் ஆகிய 3 பேரை கைது செய்தனா். மேலும் இவா்களது நண்பா்கள் 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT