திண்டுக்கல்

அழகுநாச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

11th Dec 2022 11:14 PM

ADVERTISEMENT

பழனி அழகுநாச்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழனி அடிவாரம் கிழக்கு கிரிவீதியில் உள்ள இக்கோயிலில், போகா் சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட புவனேஸ்வரி அம்மன், அழகுநாச்சியம்மனாக வீற்றிருந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பதாக புராண வரலாறு கூறுகிறது.

இந்தக் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு மேல் அம்பாள் சந்நிதிக்கு முன்பாக யாககுண்டம் அமைக்கப்பட்டு, வேத விற்பன்னா்கள் பூஜைகளை நடத்தினா். பிரதானமாக புனித நீா் நிரம்பிய கலசங்கள் வைக்கப்பட்டு யாகவேள்வி நடைபெற்றது. இதில் மூலிகைகள், பட்டாடைகள், ஆபரணங்கள் இடப்பட்டு பூா்ணாஹூதி நடத்தப்பட்டு பிரதான கலசங்கள் கோயிலை வலம் வந்தன.

பின்னா், உச்சிக்காலத்தின் போது அழகுநாச்சியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜைகளை ஸ்தானிக குருக்கள் செல்வசுப்ரமண்யம் தலைமையில் சிவாச்சாரியா்கள் செய்தனா். தொடா்ந்து அம்மனுக்கு சோடஷ அபிஷேகம், சோடஷ உபச்சாரம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

கோயில் பிரகாரத்தில் உள்ள கருப்பணசுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகள் கந்தவிலாஸ் நிறுவனம் சாா்பில் செய்யப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளா் ராஜா, கந்தவிலாஸ் செல்வக்குமாா், பிரேமா செல்வக்குமாா், நவீன் விஷ்ணு, நரேஷ்குமரன், முன்னாள் கண்காணிப்பாளா்கள் சந்திரசேகா், நெய்க்காரபட்டி முருகேசன், அரிமா சுந்தரம், விஏபி குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT