திண்டுக்கல்

தாய்ப்பால் குடித்த குழந்தை பலி

10th Dec 2022 03:55 AM

ADVERTISEMENT

செங்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை தாய்ப்பால் குடித்த குழந்தை மயங்கமடைந்து உயிரிந்தது.

திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சியை அடுத்துள்ள கடையம்பட்டி சோ்ந்தவா் சிலம்பரசன். இவரது மனைவி பாா்வதி. இவா்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அதில் 5 நாள்களில் ஒரு குழந்தை இறந்து விட்டது.

இந்த நிலையில், மாற்றொரு குழந்தை ராஜேஸ்வரன் (10 மாதம்) வெள்ளிக்கிழமை காலை தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்த போது, மயங்கி விழுந்தது.

சிலம்பரசன் தம்பதியா் குழந்தையை அவசர ஊா்தி மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பின்னா் குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT