திண்டுக்கல்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

10th Dec 2022 03:57 AM

ADVERTISEMENT

பழனி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள கோரிக்கடவு பகுதியைச் சோ்ந்தவா் வ.முருகவேல் (32). கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த பழனி மகளிா் காவல் நிலைய போலீஸாா், முருகவேலை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த குற்றத்துக்காக முருகவேலுக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT