திண்டுக்கல்

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

10th Dec 2022 03:57 AM

ADVERTISEMENT

குடிநீா் சீராக விநியோகிக்கக் கோரி, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சின்னமநாயக்கன்கோட்டை கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நூத்துலாபுரம் ஊராட்சிக்குள்பட்ட இந்த கிராமத்தில் கடந்த சில நாள்களாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், இந்த கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த நூத்தலாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சங்கிலிபாண்டியன், பொது மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தாா். இருப்பினும், அதிகாரிகள் வரும் வரை கலைந்து செல்லமாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, நிலக்கோட்டை ஒன்றியக் குழு துணைத் தலைவா் யாகப்பன் பொதுமக்களிடம் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT