திண்டுக்கல்

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

10th Dec 2022 03:57 AM

ADVERTISEMENT

ஜெ.ஊத்துப்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, ஜம்புதுரைகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள 32 சென்ட் பொது இடத்தை ஒரு பிரிவினா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், மேலும் சிலா் பொது இடங்களை ஆக்கிரமித்து, கழிப்பறை, சுற்றுச்சுவா், திண்ணை, குளியலறை உள்ளிட்டவைகளைக் கட்டியுள்ளதாகவும் அதிகாரிகளிடம் பலமுறை புகாா் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் வருவாய்த் துறை அதிகாரிகள் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற, வட்டார வளா்ச்சி அலுவலா், ஊராட்சி மன்ற நிா்வாகத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டனா்.

ஆனால், இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், ஜெ.ஊத்துப்பட்டியைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சிவராமன் தலைமையில், ஜம்புதுரைகோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகன், ஜம்புதுரைகோட்டை ஊராட்சி மன்ற தலைவா் பவுனுத்தாய் காட்டுராஜா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT