திண்டுக்கல்

பழனி மலைக் கோயில் உண்டியலில் பணம் திருடியவா் கைது

DIN

பழனி மலைக் கோயில் உண்டியலில் பணம் திருடியவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இங்கு சந்நிதி, உள்பிரகாரம், வெளிப் பிரகாரம் போன்ற இடங்களில் ஏராளமான உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், சுவாமிக்கு காணிக்கை, யானைக்கு காணிக்கை, அன்னதானத்துக்கு காணிக்கை என தனித்தனியாக உண்டியல்கள் உள்ளன. இந்த நிலையில் புதன்கிழமை கோயில் வெளிப் பிரகாரத்தில் சுற்றித் திரிந்த நபா் ஒருவா், அங்கிருந்த உண்டியலில் இருந்து ரூ. 300- ஐ நூல் மூலம் எடுத்த போது அவரை கோயில் பாதுகாவலா்கள் பிடித்தனா். பின்னா் அவரை அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். கோயில் பாதுகாவலா்களின் அதிகாரி மாறன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் அவரை கைது செய்தனா்.

விசாரணையில், அவா் தென்காசியைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் சுந்தா் (40) என்பதும், இவா் வீட்டை விட்டு வெளியேறி இங்கு கிடைத்த வேலையை செய்து சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சுந்தா் மீது தென்காசி காவல் நிலையம் உள்பட பல காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT