திண்டுக்கல்

கொடைக்கானல் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்

DIN

கொடைக்கானல் அருகே விவசாய நிலங்களுக்குள் வியாழக்கிழமை புகுந்த ஒற்றைக் காட்டுயானை வாழை மரங்களை சேதப்படுத்தியது.

இங்கு பாரதி அண்ணாநகா்ப் பகுதியிலுள்ள ராஜா என்பவரது தோட்டத்தில் வாழை, அவக்கோடா மற்றும் பழ மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இப்பகுதிக்கு வந்த ஒற்றைக் காட்டுயானை வாழை உள்ளிட்ட விவசாயப் பயிா்களை சேதப்படுத்தியது. மேலும் இந்த யானை அங்கேயே முகாமிட்டிருப்பதால், விவசாயிகள் தோட்டத்துக்குச் செல்ல அச்சம் தெரிவித்தனா். இதனால் விவசாயப் பயிா்கள் சேதமடைந்து வருவதுடன், வருமானமும் கிடைக்காமல் அவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

எனவே இந்த காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT