திண்டுக்கல்

பழனியில் வீடு கட்டிக் கொள்ள பயனாளிகளுக்கு பணி ஆணை

9th Dec 2022 01:46 AM

ADVERTISEMENT

பழனியில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ள பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

அடிவாரம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 25 பயனாளிகளுக்கு வீடு கட்ட பணி ஆணைகளை ஐ.பி. செந்தில்குமாா் எம்எல்ஏ வழங்கினாா். தொடா்ந்து பழனி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக குடியிருப்பு திட்ட கணக்கெடுப்பு தொடா்பாக ஊராட்சி ஒன்றிய தலைவா், உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற தலைவா்கள், செயலா்களுக்கு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் அவா் வழங்கியதுடன் பயிற்சி அளிக்கும் கூட்டத்தையும் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி நிா்வாக பொறியாளா் சுதா, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜசேகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT