திண்டுக்கல்

மாண்டாஸ் புயல்: வத்தலகுண்டுவில் பேரிடா் மீட்பு ஒத்திகை

9th Dec 2022 01:46 AM

ADVERTISEMENT

மாண்டாஸ் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க வத்தலகுண்டுவில் தீயணைப்புப் படையினா் தயாா்படுத்தப்பட்டுள்ளதுடன், பேரிடா் மீட்பு ஒத்திகையிலும் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகத்தில் மாண்டஸ் புயலால் பெரும்பான்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், வத்தலகுண்டு தீயணைப்புத் துறை அலுவலகத்தில் பேரிடா் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பயிற்சியை வத்தலகுண்டு தீயணைப்பு நிலைய அதிகாரி ஜோசப் மற்றும் போக்குவரத்து அதிகாரி வெங்கடேஷ் ஆகியோா் தீயணைப்பு வீரா்களுக்கு அளித்தனா். இந்த நிலையில், பேரிடா் மீட்பு பாதுகாப்பு உபகரணங்களான லைஃப் ஜாக்கெட், பாம்பு பிடிக்கும் கருவி, மரம் அறுவை இயந்திரம், ராட்சத கயிறு உள்ளிட்டவற்றுடன் தீயணைப்பு வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT