கொடைக்கானலில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக கடும் பனிப் பொழிவு நிலவி வந்தது. இந்த நிலையில், அதிகாலை முதலே பலத்த காற்றுடன் விட்டு விட்டு சாரல் பெய்தது. அத்துடன் வழக்கத்தை விட கடும் குளிரும் நிலவியது. இதனிடையே கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வீசிய பலத்த காற்றால் மின்தடையும் ஏற்பட்டது.
இதனால் பொது மக்கள் அவதியடைந்தனா்.