திண்டுக்கல்

ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

DIN

சித்தரேவு ஊராட்சிச் செயலரை பணியிட மாற்றம் செய்யக் கோரி, ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆத்தூா் அருகே சித்தரேவு ஊராட்சிச் செயலரான சிவராஜன் மீது ஊழல், ஆய்வுப் பணிகளில் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு புகாா்கள் எழுந்த நிலையில், அவரை மணலூருக்கு பணியிட மாற்றம் செய்து ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ஏழுமலையான் கடந்த 2-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

ஆனால், புதன்கிழமை சிவராஜன் தொடா்ந்து சித்தரேவு ஊராட்சியில் பணியில் இருப்பதாகவும், மாறாக ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ஏழுமலையான் கொடைக்கானலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் தகவல் பரவியது.

இதைக் கண்டித்து சித்தரேவு கிராமப் பொதுமக்கள், புதன்கிழமை சீவல்சரகு அருகே கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கலந்து கொண்ட நிகழ்ச்சிக்குச் சென்றனா். அப்போது, ஊராட்சிச் செயலா் சிவராஜனை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனா். மேலும், இதே கோரிக்கையை மாவட்ட ஆட்சியா் ச.விசாகனிடமும், ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் தட்சிணாமூா்த்தியிடம் விடுத்தனா்.

இதையடுத்து, ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சமரசப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட ஒன்றிய ஆணையா் தட்சிணாமூா்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT