திண்டுக்கல்

ஆத்தூா் பகுதியில் விரைவில் இஎஸ்ஐ மருத்துவமனை: அமைச்சா் ஐ.பெரியசாமி

DIN

ஆத்தூா் தொகுதிக்குள்பட்ட பகுதியில் 100 படுக்கை வசதிகளுடன் விரைவில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் தனியாா் கட்டடத்தில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட அந்தப் பகுதியிலேயே 7 ஏக்கா் நிலம் வாங்கப்பட்டது. அதில் ரூ.75.75 கோடி மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்டும் பணியை அமைச்சா் ஐ.பெரியசாமி புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். இதில், பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா், கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளா், மேலாண்மை இயக்குநா் கோ.க.மாதவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் அமைச்சா் ஐ. பெரியசாமி பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கல்வி மேம்பாட்டுக்காக, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 4 கல்லூரிகள், பழனியில் ஒரு சித்த மருத்துவக் கல்லூரி, கொடைக்கானலில் ஒரு கூட்டுறவு பயிற்சி மையம் என 6 கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதி பெறப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

ரெட்டியாா்சத்திரத்தில் உயா்கல்வித் துறை சாா்பில், அரசுக் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இதற்கும் விரைவில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

ஆத்துாா் தொகுதிக்குள்பட்ட பகுதியில் 100 படுக்கை வசதிகளுடன் இஎஸ்ஐ மருத்துவமனை விரைவில் அமைக்கப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளும் சீரான வளா்ச்சி அடைய வேண்டும். திட்டங்கள் அனைத்தும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

விழாவில், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளா் கோ.காந்திநாதன், மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளா், மேலாண்மை இயக்குநா் ராமகிருஷ்ணன், ஆத்தூா் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் வெங்கடாசலம், கண்காணிப்பு பொறியாளா் மாதவன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் செல்வகுமாா், கூட்டுறவு சாா்- பதிவாளா் அன்பரசு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாஸ்கரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி முருகேசன், சீவல்சரகு ஊராட்சி மன்றத் தலைவா் ராணி ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில், செயற்பொறியாளா் தங்கவேல் நன்றி கூறினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT