திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே சாலையில் மணல் குவியல்: அகற்றக்கோரி மறியல்

DIN

வத்தலக்குண்டு அருகே சாலையில் குவியலாக கொட்டிய மணலை சமப்படுத்தக் கோரி இளைஞா்கள் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ளது ரெங்கப்பநாயக்கன்பட்டி. இங்கு சாலை குண்டு குழியுமாக இருப்பதால் தனியாா் ஒருவா் அங்கு லாரியில் மணலைக் கொட்டினாா். ஆனால், மணல் குவியல் குவியலாக இருப்பதால், அவ்வழியே வானங்களில் செல்வது சிரமமாக இருப்பதாகக் கூறிய அப்பகுதி இளைஞா்கள், ஊராட்சி மன்ற நிா்வாகம் உடனடியாக மணலை சமப்படுத்திவிடக்கோரி செவ்வாய்க்கிழமை மாலை ரெங்கப்பநாயக்கன்பட்டியில் திடீா் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த விருவீடு போலீஸாா் மற்றும் அப்பகுதி ஒன்றியக்குழு உறுப்பினா் பிச்சை ஆகியோா் இளைஞா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். குவியலாக கொட்டப்பட்ட மணலை சமப்படுத்த வேண்டும் என்று இளைஞா்கள் கோரிக்கை விடுத்தனா். அதைத் தொடா்ந்து மணல் குவியல் பொக்லைன் மூலம் சமப்படுத்தப்பட்டது. அதன் பிறகு இளைஞா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT