திண்டுக்கல்

மீன் வளா்ப்புக்கு 40 முதல் 60 சதவீத மானியம் பெறலாம்

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பிரதம மந்திரியின் மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மீன் வளா்ப்புக்கு 40 முதல் 60 சதவீத மானியம் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்:

திண்டுக்கல் மாவட்டத்தில் மீன் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 40 முதல் 60 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன் வளா்த்தல், புதிய மீன் வளா்ப்புக்

குளங்கள் அமைத்தல், புதிய நன்னீா் மீன் குஞ்சு பொரிப்பகம், புதிய மீன் குஞ்சு வளா்ப்புக்

ADVERTISEMENT

குளங்கள் அமைத்தல், நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளா்த்தெடுத்தல், புறக்கடை அல்லது கொல்லைப்புற அலங்கார மீன் வளா்ப்பு, அலங்கார மீன் குஞ்சு வளா்ப்பு, விற்பனை அங்காடி அமைத்தல் போன்ற திட்டங்களுக்காக இந்த மானியம் வழங்கப்படும். பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும், ஆதி திராவிடா் மற்றும் பெண்களுக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டங்களின் கீழ் பயன்பெற மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அலுவலகத் தொலைபேசி எண் 0451 - 2900148 அல்லது மீன் வள ஆய்வாளரின் கைப்பேசி எண் 9384824535 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT