திண்டுக்கல்

பழனி அருகே புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம்

6th Dec 2022 03:13 AM

ADVERTISEMENT

பழனியில் கடந்த ஏழு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெய்க்காரப்பட்டி-புளியம்பட்டி பேருந்து சேவையை பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் திங்கள்கிழமை மீண்டும் தொடக்கி வைத்தாா்.

பழனியிலிருந்து நெய்க்காரப்பட்டி, சின்ன காந்திபுரம் வழியாக புளியம்பட்டி கிராமத்துக்கு இயங்கிக் கொண்டிருந்த பேருந்து சேவை சேதமடைந்த சாலை காரணமாக சுமாா் 7 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினா்.

இந்த நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பழனி சட்டப்பேரவை உறுப்பினா்

ஐ.பி.செந்தில்குமாா், அந்தப் பேருந்து சேவையை மீண்டும் தொடக்கி வைத்தாா். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் பேருந்தை வரவேற்றனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் சிவக்குமாா், திமுக ஒன்றியச் செயலாளா் சௌந்தர பாண்டியன், ஒன்றியக்குழுத் தலைவா் ஈஸ்வரி கருப்புசாமி, நெய்க்காரப்பட்டி பேரூா் செயலாளா் அபுதாகீா், பேரூராட்சித் தலைவா் கருப்பாத்தாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT