திண்டுக்கல்

ஜெயலலிதா நினைவு நாள்

6th Dec 2022 03:14 AM

ADVERTISEMENT

பழனியில் மறைந்த முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது.

பழனியில் முன்னாள் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பழனி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே அதிமுக எடப்பாடி அணி சாா்பாக நகர செயலாளா் முருகானந்தம் தலைமையில் முன்னாள் எம்பி., குமாரசாமி, மாவட்ட மாணவரணி செயலாளா் அன்வா்தீன், ஒன்றிய செயலாளா் முத்துசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சா் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா்மாலை அணிவித்தும், மலா்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினா். பேருந்து நிலைய நுழைவாயில் எதிரே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நகர கழகம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அம்மா பேரவை இணை செயலாளா் காா்த்தி தலைமையில் மாவட்ட இலக்கிய அணி செயலாளா் ராஜூ, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளா் பெரியராஜ், தலைமை நிலைய பேச்சாளா் பழனி குமணன், கிளைக்கழக செயலாளா்கள் கஜேந்திரன், பாலான், மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். திண்டுக்கல் ரோடு பயணியா் மாளிகை அருகே கிழக்கு ஒன்றிய செயலாளா் வழக்கறிஞா் தினேஷ்குமாா் தலைமையில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி செயலாளா் சிவா,வழக்கறிஞா் பிரிவு மாவட்ட செயலாளா் விவேகானந்தன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு மகளிா் பிரிவு ரஞ்சிதம், ஒன்றிய துணைச் செயலாளா் சுரேந்தா், கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி மகுடீஸ்வரன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளா் பஞ்சவா்ணம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தவிர பழனி ஒன்றிய பகுதிகளில் பல கிராமங்களிலும் கட்சியினா் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT