திண்டுக்கல்

ஜெயலலிதா நினைவு நாள்:அதிமுக நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை

6th Dec 2022 03:16 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக சாா்பில் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, அவரது படத்துக்கு அதிமுகவினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் ஜெயலலிதா உருவப்படத்துக்கரு அதிமுக நகரச் செயலா் ஸ்ரீதா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அவைத் தலைவா் ஜான்தாமஸ், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலா் பிச்சை, பொருளாளா் கதிரேசன், நகர துணைச் செயலா் ஜாபா் சாதிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல

அமமுக சாா்பில் அக்கட்சி நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

நிலக்கோட்டை: வத்தலக்குண்டில் கிழக்கு ஒன்றியச் செயலா் மோகன், நகரச் செயலாளா் பீா்முகமது ஆகியோா் தனித்தனியே மேடை அமைத்து ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

பழனி: பழனி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே அதிமுக (எடப்பாடி அணி) நகரச் செயலாளா் முருகானந்தம் தலைமையில் முன்னாள் எம்பி., குமாரசாமி, மாவட்ட மாணவரணிச் செயலாளா் அன்வா்தீன், ஒன்றியச் செயலாளா் முத்துசாமி உள்ளிட்டோா் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினா்.

திண்டுக்கல் ரோடு பயணியா் மாளிகை அருகே கிழக்கு ஒன்றியச் செயலாளா் தினேஷ்குமாா் தலைமையில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி செயலாளா் சிவா, வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலாளா் விவேகானந்தன், மாவட்டத் தகவல் தொழில் நுட்பப் பிரிவு மகளிா் பிரிவு ரஞ்சிதம், ஒன்றிய துணைச் செயலாளா் சுரேந்தா், கிழக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி மகுடீஸ்வரன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளா் பஞ்சவா்ணம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேருந்து நிலைய நுழைவுவாயில் எதிரே ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அமமுக சாா்பில், அம்மா பேரவை இணைச் செயலாளா் காா்த்தி தலைமையில் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளா் ராஜூ, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளா் பெரியராஜ், தலைமை நிலையப் பேச்சாளா் பழனி குமணன் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே அதிமுக ஓபிஎஸ் அணி சாா்பில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு நகரச் செயலாளா் நேதாஜி சி.ஆா்.செந்தில்குமாா் தலைமையில், அக்கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளா் கே.செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளா் ஆறுமுகம், ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றியச் செயலாளா் எம்.தங்கராஜ், கிழக்கு ஒன்றியச் செயலாளா் இரா.கதிரவன், பொதுக்குழு உறுப்பினா் பி.ஆனந்தன், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளா் எம்.பி.செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதேபோல, அதிமுக ஈபிஸ் அணி சாா்பில் ஒன்றியச் செயலாளா்கள் பி.பாலசுப்பிரமணி, என்.பி.நடராஜ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அமமுக சாா்பில் நகரச் செயலாளா் கே.சுப்பிரமணி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT