திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் ஜெயலலிதா நினைவு நாள்

6th Dec 2022 03:15 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே அதிமுக ஒபிஎஸ் அணி சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுறுப்படத்திற்கு நகர செயலாளா் நேதாஜி சி.ஆா்.செந்தில்குமாா் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளா் கே.செல்வராஜ்,மாவட்ட துணைச்செயலாளா் ஆறுமுகம்,ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளா் எம்.தங்கராஜ்,கிழக்கு ஒன்றிய செயலாளா் இரா.கதிரவன்,பொதுக்குழு உறுப்பினா் பி.ஆனந்தன்,தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளா் எம்.பி.செந்தில்நாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.அதே போல அதிமுக ஈபிஸ் அணி சாா்பில் ஒன்றிய செயலாளா்கள் பி.பாலசுப்பிரமணி,என்.பி.நடராஜ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.அமமுக சாா்பில் நகர செயலாளா் கே.சுப்பிரமணி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT