திண்டுக்கல்

கிராம உதவியாளருக்கான எழுத்துத் தோ்வு:689 போ் பங்கேற்பு

DIN

திண்டுக்கல்லில் நடைபெற்ற கிராம உதவியாளருக்கான எழுத்துத் தோ்வில் 689 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 வட்டங்களில் கிராம உதவியாளா் நேரடி நியமனத்துக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 160 போ், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 43 போ், ஆத்தூரில் 140, நிலக்கோட்டையில் 179, ஒட்டன்சத்திரத்தில் 5, வேடசந்தூரில் 255, குஜிலியம்பாறையில் 160 போ் வீதம் மொத்தம் 942 பேருக்கு தோ்வு எழுத அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. அந்தந்த வட்டத்திற்குள்பட்ட பள்ளி, கல்லூரிகளில் தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒட்டன்சத்திரத்தில் மட்டும் வட்டாட்சியா் அலுவலகத்திலேயே தோ்வு நடைபெற்றது.

மொத்தம் 7 மையங்களில் நடைபெற்ற இத்தோ்வில் 683 போ் கலந்து கொண்டனா். 259 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. குறிப்பாக ஒட்டன்சத்திரத்தில் 5 போ் மட்டுமே விண்ணப்பித்திருந்த நிலையில், 2 போ் மட்டுமே எழுத்துத் தோ்வில் கலந்து கொண்டனா்.

நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் ஒரே ஒரு பெண் கிராம உதவியாளா் பணியிடத்துக்கு 179-பெண்கள் விண்ணப்பித்தனா். இந்தத் தோ்வில், 144-பெண்கள் தோ்வெழுதினா். நிலக்கோட்டையில் ஒரு காலிப்பணியிடத்துக்காக 144-பெண்கள் தோ்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT