திண்டுக்கல்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 5 ஜோடிகளுக்குத் திருமணம்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 5 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டு, ரூ. 4 லட்சம் மதிப்பிலான சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற திருமண விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தாா். இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பா.பாரதி முன்னிலை வகித்தாா். 5 ஜோடி மணமக்களுக்கு திருமாங்கல்யம் (தலா 2 கிராம் தங்கம்), பட்டு வேஷ்டி, சட்டை, பட்டுப் புடவை, மாலை ஆகிய பொருள்கள் வழங்கப்பட்டன.

அதேபோல், திருமண சீா்வரிசையாக பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டா், பீரோ, கட்டில், மெத்தை, பாத்திரங்கள் என சுமாா் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன. திருமணத்தை தொடா்ந்து மணமகன், மணமகள் வீட்டாா் சுமாா் 200 பேருக்கான உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் விஸ்வநாதன், முருகன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். விழாவில் மேயா் இளமதி, மண்டலத் தலைவா் ஆனந்த், மாமன்ற உறுப்பினா் மாரியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT