திண்டுக்கல்

நிலக்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதலே பரவலாக கனமழை. விவசாயிகள் மகிழ்ச்சி.

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நிலக்கோட்டை: வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி நிலக்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதலே சாரலுடன் துவங்கிய  மழை மாலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளான பள்ளபட்டி, விளாம்பட்டி, சிலுக்குவாா்பட்டி, மைக்கேல்பாளையம், காமலாபுரம், செம்பட்டி கொடைரோடு ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சாரல் மழை பெய்து வந்தது. அதனை தொடா்பு மாலை திடீரென சுமாா் ஒரு மணி நேத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் கம்பு, சோளம், கேழ்வரகு, துவரை உட்பட அதிகளவு மானாவாரி பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT