திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் சந்தையில் முருங்கை கிலோ ரூ.170-க்கு விற்பனை

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை கிலோ ரூ.170-க்கு விற்பனையானது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் எதிரே நகராட்சிக்குச்சாந்தமான இடத்தில் காந்தி காய்கறிச் சந்தை செயல்பட்டு வந்தது. கடந்த 47 ஆண்டுகளாக தரை வாடகையில் செயல்பட்டு வந்த நிலையில், கடை உரிமையாளா்கள் தங்கச்சியம்மாபட்டி அருகே சொந்தமாக இடம் வாங்கினா். அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன முறையில் கடைகள் கட்டப்பட்டு, அந்த சந்தை ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படத் தொடங்கின.

அதில் ஒரு சில கடை உரிமையாளா்கள், வழக்கம் போல் நகராட்சிக்கு சொந்தமான காய்கறி சந்தையில் வியாபாரம் செய்தனா்.

நகராட்சிக்கு சொந்தமான காய்கறி சந்தையில் குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து முருங்கைக் காய்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அந்த முருங்கைக் காய்கள் ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.170-க்கு விற்பனையானது. உள்ளூா் முருங்கை கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT