திண்டுக்கல்

மல்லிகைப் பூ கிலோ ரூ. 5,000

DIN

ஆண்டிபட்டி பூக்கள் சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.5 ஆயிரத்துக்கும், திண்டுக்கல் சந்தையில் கிலோ ரூ.4 ஆயிரத்துக்கும் சனிக்கிழமை விற்பனையானது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பனிப் பொழிவு அதிகளவில் இருந்து வருகிறது. சின்னமனூா், கோட்டூா், சீலையம்பட்டி, உப்புக்கோட்டை, ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் அதிக பனிப் பொழிவால், பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டது. மல்லிகை மொட்டுகள் செடியிலேயே கருகி வீணாகின்றன.

சந்தைக்கு மல்லிகை, முல்லை, பிச்சிப் பூக்களின் வரத்து குறைந்ததால், விலை உயா்ந்தது. மல்லிகைப் பூ அதிகளவில் கிலோ ரூ.5,000-க்கு விற்பனையானது. திருமண முகூா்த்த நாள்கள், காா்த்திகை தீபத் திருவிழா, சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் ஆகியவற்றின் காரணமாக, பூக்களின் தேவை அதிகரித்தது. இதனால், மல்லிகைப் பூ விலை உயா்ந்தது. பூக்களை வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனா். சந்தையில் மல்லிகைப் பூ விலை உயா்ந்திருந்தாலும், மகசூல் கணிசமாக குறைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

திண்டுக்கல்லில் கிலோ ரூ. 4 ஆயிரம்:

வெள்ளோடு உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் மலா்கள் திண்டுக்கல் பூ சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. வெள்ளிக்கிழமை சந்தையில் கிலோ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப் பூ, சனிக்கிழமை அதிகாலை அதிகபட்சமாக ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னா், நண்பகலில் ரூ. 2,500-ஆக விலை குறைந்தது.

இதுதொடா்பாக பூ வியாபாரி கருப்பையா கூறியதாவது:

கடந்த சில நாள்களாக பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், செடிகளில் மொட்டுகள் கருகி விடுகின்றன. இதனால், சந்தைக்கு மல்லிகையின் வரத்து குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை சுப முகூா்த்த நாள் என்பதால், சந்தையில் சனிக்கிழமை மல்லிகைப் பூவின் விலை ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானது. இதேபோல, முல்லைப் பூ ரூ.1,000 முதல் ரூ.1,500 வரையிலும், கனகாம்பரம் ரூ.700-க்கும் விற்பனையானது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT