திண்டுக்கல்

வேன் மோதியதில் முதியவா் பலி

4th Dec 2022 12:41 AM

ADVERTISEMENT

வேடசந்தூா் அருகே சனிக்கிழமை வேன் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்துள்ள குட்டம் ஊராட்சிக்குள்பட்ட காட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தன் (70). இவா் இருசக்கர வாகனத்தில் வேடசந்தூா் நோக்கி சனிக்கிழமை வந்தபோது, கரூா் நோக்கிச் சென்ற சுற்றுலா வேன் மோதி ஏற்பட்டது. இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT