திண்டுக்கல்

சிறுமி பலாத்காரம்: இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

4th Dec 2022 12:41 AM

ADVERTISEMENT

கொடைரோடு அருகே பளியா் இன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கொடைரோடு அருகே சடையாண்டிபுரம் பிரிவு அருகே தேநீா்க் கடை நடத்தி வருபவா் ரமேஷ் (37). இவா், சிறுமலை அடிவாரத்தைச் சோ்ந்த பழங்குடியின பளியா் இனத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தாா். இதில் அவா் கா்ப்பமானாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த தகவலின் பேரில், மாவட்ட சமூக நலத் துறை அதிகாரி சியமளா, அமையநாயக்கனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT