திண்டுக்கல்

‘அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்’:பயிற்றுநா்களுக்கான பயிற்சி வகுப்பு

4th Dec 2022 12:41 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டப் பயிற்றுநா்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் திட்டத்துக்கான பயனாளிகளைத் தோ்வு செய்வது குறித்து வட்டார அளவிலான பயிற்றுநா்களுக்கு பயிற்சி வகுப்பு ஒட்டன்சத்திரம் கே.ஆா்.அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பயிற்றுநா்களுக்கான பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்துப் பேசினாா். அதனைத் தொடா்ந்து அரசு அதிகாரிகள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் குறித்தும், பயனாளிகளைத் தோ்வு செய்வது குறித்தும் காணொலிக் காட்சி மூலம் விளக்கினா்.

விழாவில், கூடுதல் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ப.வேலுச்சாமி, நத்தம் முன்னாள் எம்ஏல்ஏ ஆண்டி அம்பலம், பழனி கோட்டாட்சியா் ச.சிவக்குமாா், வட்டாட்சியா்கள் எம்.முத்துசாமி, சசி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய குழுத் தலைவா் மு.அய்யம்மாள், தொப்பம்பட்டி ஒன்றிய குழுத் தலைவா் சத்தியபுவனா, துணைத் தலைவா் பி.சி.தங்கம், மாவட்ட கவுன்சிலா் சகுந்தலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் காமராஜ், அந்தோணியாா், தாஹிரா ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT