திண்டுக்கல்

பொது இடங்களில் யாசகம் பெற்ற 65 போ் மீட்பு

4th Dec 2022 12:41 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் யாசகம் பெற்ற 65 பேரை மீட்ட போலீஸாா் காப்பகத்திலும், உறவினா்களிடமும் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டக் காவல் துறை சாா்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பேருந்து நிலையம், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவா்களை மீட்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல், வேடசந்தூா், பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் ஆகிய காவல் உள்கோட்டங்களில் இந்த மீட்புப் பணிகள் நடைபெற்றன. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சோதனையின்போது, 24 யாசகா்கள் மீட்கப்பட்டனா்.

அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் 41 போ் மீட்கப்பட்டனா். போலீஸாா், சமூக ஆா்வலா்கள் மூலம் மீட்டப்பட்டவா்களுக்கு முடித் திருத்தம் செய்தும், முகச் சவரம் செய்தும், புதிய ஆடைகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

மொத்தம் 65 நபா்கள் மீட்கப்பட்டதில் 60 வயதுக்கு மேற்பட்ட யாசகா்கள், சமூக நலத் துறையினா் மூலம் முதியோா் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டனா். 60 வயதுக்குள்பட்டோா், அவா்களது உறவினா்களை அழைத்து ஒப்படைக்கும் பணியிலும் போலீஸாா் ஈடுபட்டனா். இந்த மீட்புப் பணி ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்து நடைபெறும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT