திண்டுக்கல்

வாடகை செலுத்தாத 19 கடைகளுக்கு ‘சீல்’: பாரபட்சம் காட்டுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு

DIN

வாடகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி நிா்வாகம் பாரபட்சமாக செயல்படுவதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டினா்.

திண்டுக்கல் பேருந்து நிலையம், பிரதான சாலை, அறிஞா் அண்ணா வணிக வளாகம், பூ சந்தை உள்பட 9 இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான 63 கடைகளுக்கு வியாபாரிகள் கடந்த பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்தனா். எனவே, இந்தக் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி நிா்வாகம் எடுத்தது.

பேருந்து நிலையத்திலுள்ள 10 கடைகள் மொத்தம் ரூ. 16.51 லட்சம் வாடகைத் தொகை நிலுவையில் வைத்திருந்ததை அடுத்து, அந்தக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா். இதேபோல, பிரதான சாலை, அண்ணா வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

வியாபாரிகள் குற்றச்சாட்டு:

இதனிடையே, திமுகவினா் பரிந்துரையின் பேரில் சில கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், வாடகை நிலுவை குறித்து நோட்டீஸ் வழங்கவில்லை என்றும், நிலுவைத் தொகையை செலுத்தச் சென்ற சில கடைகளின் உரிமையாளா்களிடம் வாடகைத் தொகையை மாநகராட்சி அலுவலா்கள் பெற மறுத்துவிட்டதாகவும் வியாபாரிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:

63 கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் களம் இறங்கினாா். ஆனால், திமுகவினரின் பரிந்துரையின் பேரில் பெரும்பாலான கடைகள் மீதான நடவடிக்கையை தவிா்த்து விட்டனா். சில இடங்களில் நோட்டீஸ் கூட வழங்காமல் நடவடிக்கை எடுத்தனா் என்றனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

63 கடைகள் தரப்பில் ரூ. 75 லட்சம் வாடகை நிலுவையில் இருந்து வருகிறது. அதில், அதிகபட்சத் தொகை நிலுவையிலுள்ள 19 கடைகளின் மீது மட்டும் வெள்ளிக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த 19 கடைகள் மொத்தம் ரூ. 24 லட்சம் வாடகை பாக்கி நிலுவை வைத்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT