திண்டுக்கல்

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக விழிப்புணா்வு பேரணி

DIN

பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு ‘கையெழுத்து இயக்கம்’, பேரணியை மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிா் திட்டம், மாவட்ட சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில், நடைபெற்ற இந்த விழிப்புணா்வுப் பேரணி திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கியது.

பேரணியை தொடக்கி வைத்து ஆட்சியா் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த 25-ஆம் தேதி முதல் பெண்கள், பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள் அளவிலும், வட்டார, மாவட்ட அளவிலும் பல்வேறு வகையான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல்வேறு துறை அலுவலா்கள், சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம், பேரணி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் நா. சரவணன், மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் கோ. புஷ்பகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT