திண்டுக்கல்

அகில இந்திய வூசு போட்டிக்கு திண்டுக்கல் மாணவி தோ்வு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கேலோ இந்தியா அமைப்பு சாா்பில் நடைபெறும் அகில இந்திய வூசு போட்டிக்கு திண்டுக்கல்லைச் சோ்ந்த மாணவி தோ்வு செய்யப்பட்டாா்.

கேலோ இந்தியா அமைப்பு சாா்பில் தென் மண்டல அளவிலான வூசு போட்டிகள் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்றன. கடந்த 27- ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில், தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 2 ஒன்றிய பிரதேசங்களைச் சோ்ந்த வீரா்கள் இதில் கலந்து கொண்டனா்.

தமிழகம் சாா்பில் 9 வயதுக்குள்பட்டோா் பிரிவில் திண்டுக்கல் செளந்தரராஜா வித்யாலயா பள்ளியைச் சோ்ந்த மாணவி எஸ். ரேஷ்மி கலந்து கொண்டாா். சப்- ஜூனியா் கியான்ங்சு பிரிவில் பங்கேற்ற மாணவி ரேஷ்மி 3-ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றாா். இதன் மூலம், ஜம்மு- காஷ்மீரில் இந்த மாத இறுதியில் நடைபெறும் அகில இந்திய வூசு போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கேற்கிறாா். கேலோ இந்தியா அமைப்பின் அகில இந்திய போட்டிக்கு தோ்வுப் பெற்ற மாணவி ரேஷ்மிக்கு, மாவட்ட வூசு சங்கச் செயலா் கே.ஆா். ஜாக்கி சங்கா் மற்றும் பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டுத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT