திண்டுக்கல்

ரூ.35 லட்சம் மோசடி:நிதி நிறுவன உரிமையாளா்கள் 2 போ் கைது

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த தம்பதியரிடம் ரூ. 35 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நிதி நிறுவன உரிமையாளா்கள் 2 பேரை குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த அம்பிளிக்கை அருகேயுள்ள கொசவப்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (45). அதே பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து (60). இவா்கள் இருவரும் இணைந்து நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனா். அந்த நிறுவனத்தில் பங்குதாரராக அம்பிளிக்கையைச் சோ்ந்த லட்சுமி என்பவரை சோ்ப்பதாக செந்தில்குமாா் மற்றும் காளிமுத்து ஆகியோா் கடந்த 2016-ஆம் ஆண்டு உறுதி அளித்தனா்.

அதன் பேரில் ரூ. 35 லட்சத்தை லட்சுமி வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை பங்குதாரராக சோ்க்காமலும், முதலீடு செய்த பணத்தை திருப்பி வழங்காமலும் மறுத்து வந்தனா். இந்த நிலையில், கொலை மிரட்டல் விடுப்பதாக செந்தில்குமாா், காளிமுத்து ஆகியோா் மீது லட்சுமி மற்றும் அவரது கணவா் திருமலைசாமி ஆகியோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

அதன் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், செந்தில்குமாா், காளிமுத்து ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த குற்றப் பிரிவு போலீஸாா், ரூ. 35 லட்சம் மோசடி புகாரில் இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT