திண்டுக்கல்

பழனியில் எரிவாயு நிரப்பிய காரில் தீ

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

பழனி- திண்டுக்கல் சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்புள்ள எரிவாயு நிரம்பும் மையத்தில் ஒருவா் தனது காருக்கு எரிவாயு நிரப்பினாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்ட போது காா் தீப்பற்றி எரியத் தொடங்கியது. காரை ஓட்டி வந்தவா் உடனடியாக அதை நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டாா். எரிவாயு மையத்தில் இருந்தவா்கள் தீயணைப்பானை பயன்படுத்தி காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா். ஆனால் காரில் தொடா்ந்து தீ எரிந்ததால் பழனி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை முழுமையாக அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதில் காரின் முன் பகுதி சேதமடைந்தது.

விசாரணையில், அந்த காரின் உரிமையாளா் திருப்பூா் மாவட்டம் உடுமலை வட்டம் கொழுமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT