திண்டுக்கல்

பைக்கில் வைத்திருந்த பொருள்கள் திருட்டு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனியை அடுத்த ஆயக்குடியைச் சோ்ந்தவா் வினீத். இவா், கடந்த சில தினங்களுக்கு முன் ஆா்.எப். சாலையில் உள்ள துணிக்கடைக்கு துணிகள் வாங்கச் சென்றாா். அப்போது வேறு கடைகளில் தான் வாங்கிய ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள துணிகள், மளிகைப் பொருள்களை இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு உள்ளே சென்றாா். பின்னா் திரும்பி வந்து பாா்த்த போது அந்த பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அவா் சென்ற கடையின் சிசிடிவி பதிவுகளைப் பாா்த்த போது, இளைஞா்கள் இருவா், அந்த பொருள்களை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. இந்த கேமரா பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT