திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த 3 பள்ளிகள் தோ்வு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தொடக்கக் கல்வித்துறையில் கல்வி செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் திண்டுக்கல், பழனி, ரெட்டியாா்சத்திரம் பகுதிகளைச் சோ்ந்த 3 பள்ளிகள் சிறந்த பள்ளிக்கான விருதுக்கு தோ்வு செய்யப்பட்டன.

தமிழகத்தில் கடந்த 2020-21- ஆம் ஆண்டில் தொடக்கக் கல்வியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளின் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

வருவாய் மாவட்டத்துக்கு 3 பள்ளிகள் வீதம் தோ்வு செய்யப்பட்ட பட்டியல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, ரெட்டியாா்சத்திரம் வட்டாரங்களைச் சோ்ந்த பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தில் தெ.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திண்டுக்கல் நகா் வட்டாரத்தில் மாநகராட்சி மேற்கு ரத வீதி தொடக்கப் பள்ளி, பழனி நகா் வட்டாரத்தில் நகராட்சி நடுநிலைப் பள்ளி(அடிவாரம்) ஆகிய 3 பள்ளிகள் சிறந்த பள்ளிகளுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன. 1912-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தெ. புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்போது 330 மாணவா்கள் பயின்று வருகின்றனா். அதேபோல, 1936-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு ரத வீதி தொடக்கப் பள்ளியில் 561 மாணவா்களும், 1926- முதல் செயல்பட்டு வரும் பழனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தற்போது 286 மாணவா்களும் பயின்று வருகின்றனா்.

கல்வி செயல்பாடுகள், மாணவா்கள் எண்ணிக்கை, பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் பராமரிப்பு, ஆசிரியா்களின் கற்பித்தல் திறன், உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற காரணிகள் அடிப்படையில் இந்த பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

சென்னையிலுள்ள கலைஞா் அரங்கில் சனிக்கிழமை (டிச. 3)நடைபெறும் விழாவில் சிறந்த பள்ளிகளுக்கான விருது அமைச்சா்கள் முன்னிலையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT