திண்டுக்கல்

தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நிறைவு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனியை அடுத்த தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வட்டார வள மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கலைத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இந்தப் பள்ளியில் கடந்த 29 ஆம் தேதி முதல் வியாழக்கிழமை (டிச. 1) வரையிலும் 3 நாள்களுக்கு கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு உயா்நிலைப் பள்ளி, அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மட்டும் பங்கேற்றனா். நிறைவு நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தாளையம், கொக்கரக்கல்வலசு, பெரிச்சிபாளையம், சாமிநாதபுரம் உள்ளிட்ட பல ஊா்களில் இருந்து 250 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் செந்தில்ராஜா தலைமை வகித்தாா். வட்டார பொறுப்பு அலுவலா் பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளா் அழகுராணி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் பிரிட்டோ யசோதா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இசை, நடனம், நாடகம், கரகாட்டம், ஒயிலாட்டம், வரைதல், வண்ணம் தீட்டுதல் என பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோா், மாநில அளவிலான போட்டிகளிலும் தகுதி பெறுவா்.

ADVERTISEMENT

இதற்கான ஏற்பாடுகளை வட்டார பொறுப்பு அலுவலா் பழனிச்சாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியா் பயிற்றுநா்கள் ரகுராமன், ஆனந்தகுமாா், திருமூா்த்தி, ராஜசேகரன், பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT