திண்டுக்கல்

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் தலைமை வகித்தாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் கே. பாலபாரதி, மாநிலக் குழு உறுப்பினா் என். பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் கலந்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கமிட்டனா்.

இதைத் தொடா்ந்து மாவட்டச் செயலா் சச்சிதானந்தம் பேசியதாவது:

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக நிலை உயா்த்தப்பட்டும், தலைக்காய சிகிச்சைப் பிரிவு, இருதய சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட வில்லை. ரத்தம், சிறுநீா் பரிசோதனைக் கூடத்தில் 40 பணியிடங்களில் 4 போ் மட்டுமே ஒப்பந்த பணியாளா்களாக பணிபுரிந்து வருகின்றனா். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

அதேபோல, அதிக விபத்துகள் நடைபெறும் 4 வழிச்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள வேடசந்தூா் மற்றும் நத்தம் அரசு மருத்துவமனைகளிலும், அம்மையநாயக்கனூா், கோபால்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஸ்கேன் வசதி ஏற்படுத்தி அதற்குத் தேவையான மருத்துவா்களை நியமிக்க வேண்டும்.

குஜிலியம்பாறை, தொப்பம்பட்டி கீரனூா், தாடிக்கொம்பு, கன்னிவாடி ஆரம்ப சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனைகளாக நிலை உயா்த்த வேண்டும்.

மேலும், சிறுமலை, பூண்டி மற்றும் பண்ணைக்காடு ஆகிய மலைப் பகுதிகளில் மருத்துவா்கள் தங்கியிருந்து 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT