திண்டுக்கல்

மேலக்கோவில்பட்டி தூய சவேரியாா் ஆலய திருவிழா தொடக்கம்

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வத்தலகுண்டு அருகே மேலக்கோவில்பட்டி புனித சவேரியாா் ஆலய திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை கத்தோலிக்க உயா்மறை மாவட்ட பொருளாளா் அருட்பணி அல்வா்ஸ் செபாஸ்டின் தலைமை வகித்தாா். மேலகோவில்பட்டி பங்குத்தந்தை ஜெயராஜ் முன்னிலை வகித்தாா். புதிதாக அமைக்கப்பட்ட கொடி மரமும், கொடியும் புனிதப்படுத்தப்பட்டன. பின்னா் கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT