திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை திறப்பு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் சோதனைச் சாவடி அருகே இஎஸ்ஐ மருத்துவமனை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ப. வேலுச்சாமி மருத்துவமனையை திறந்து வைத்தாா். முன்னதாக மதுரை மண்டல நிா்வாக மருத்துவ அலுவலா் தா்மராஜ் வரவேற்றாா். ஒட்டன்சத்திரம் நகா்மன்ற துணைத் தலைவா் ப. வெள்ளைச்சாமி, ஒன்றியத் தலைவா் மு. அய்யம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிகழ்ச்சியில், மதுரை மண்டல மருத்துவ அலுவலா் மருதுபாண்டியன், பேகம்பூா் இஎஸ்ஐ மருத்துவ அலுவலா் ஹக்கீம் சேட், ஒட்டன்சத்திரம் இஎஸ்ஐ மருத்துவ அலுவலா் ஜெரோம், முன்னாள் அரசு தலைமை மருத்துவா் ஆசைத்தம்பி,திமுக அவைத் தலைவா் தி. மோகன், தலைமை செயற்குழு உறுப்பினா் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் க. பாண்டியராஜன், நகா்மன்ற உறுப்பினா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT