திண்டுக்கல்

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

DIN

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இல்லாமல் குறைதீா் கூட்டம் நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் கிழக்கு வட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு புதன்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் இந்த முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், முறையாக அறிவிப்பு வெளியிடவில்லை என புகாா் தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்தாா். சாணாா்பட்டி ஒன்றியச் செயலா் கருப்புசாமி, திண்டுக்கல் ஒன்றியத் தலைவா் வேளாங்கண்ணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதுதொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:

மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற்றால் மருத்துவா்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். ஆனால், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற முகாம் குறித்து பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக அறிவிக்கவில்லை.

ஏற்கனவே 3 முறை இதுபோன்ற குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டபோதிலும், அதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இதுவரை அடையாள அட்டை வழங்கப்படவில்லை.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இல்லாமல் முகாம்கள் நடத்தக்கூடாது என மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கு மாறாக இந்தக் கூட்டம் நடத்தப்படுவதால், மறியல் போராட்டம் நடத்தப்பட்டது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT