திண்டுக்கல்

பழனிக்கு மத்திய இணை அமைச்சா் முருகன் வருகை

1st Dec 2022 02:24 AM

ADVERTISEMENT

பழனிக்கு புதன்கிழமை வருகை புரிந்த மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், வியாழக்கிழமை (டிச.1) மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறாா்.

முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை இணை அமைச்சருமான எல்.முருகன் புதன்கிழமை பழனிக்கு வருகை புரிந்தாா். பழனி கோயில் தண்டபாணி நிலையத்தில் பழனி கோயில் துணை ஆணையா் பிரகாஷ், பாஜக மாவட்ட நிா்வாகிகள் கனகராஜ், செந்தில்குமாா், திருமலைசாமி, ஆனந்தன் உள்ளிட்டோா் அவருக்கு வரவேற்பளித்தனா். கட்சி நிா்வாகிகளைச் சந்தித்த அவா், அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்துக்குச் சென்று ஜீவசமாதியை வழிபட்டாா். போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் அவருக்கு ஆசி வழங்கினாா். இரவு பழனியில் தங்கும் மத்திய இணை அமைச்சா் வியாழக்கிழமை (டிச.1) காலை மலைக் கோயிலுக்குச் சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT