திண்டுக்கல்

பூசணிக்காய் விலை வீழ்ச்சி: பறிக்காமல் வீணாகும் அவலம்

1st Dec 2022 02:26 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் பூசணிக்காய் விலை வீழ்ச்சிடைந்ததால், விவசாயிகள் அதைப் பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள காவேரியம்மாபட்டி, இராயக்கவுண்டன்புதூா், அரசப்பபிள்ளைபட்டி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நாட்டு பூசணிக்காய் அதிக அளவில் பயிா் செய்யப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட நிலையில், பூசணிக்காய் தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது.

இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் பூசணிக்காய் கிலோ ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவற்றைப் பறிக்கும் கூலிக்குக் கூட விலை கிடைப்பதில்லை. இதனால், விவசாயிகள் அவற்றைப் பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனா்.

இது குறித்து விவசாயி பழனிமுத்து கூறியதாவது:

ADVERTISEMENT

நான் 2 ஏக்கரில் நாட்டு பூசணி நடவு செய்துள்ளேன். தற்போது நல்ல விளைச்சல் கிடைத்தது. ஆனால், போதிய விலை கிடைக்கவில்லை. ஒட்டன்சத்திரம் சந்தையில் கிலோ ரூ.3-க்கு விற்பனை செய்யப்படுகிறது. போதிய விலை கிடைக்கவில்லை என்றாலும், அவற்றைப் பறித்து கொண்டு சந்தைக்குக் கொண்டு சென்றால், வியாபாரிகள் வாங்க யாரும் முன்வருவதில்லை. இதனால், பூசணிக்காயை செடியிலேயே விட்டு விடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT