திண்டுக்கல்

திண்டுக்கல் வட்டார வேளாண்மை அலுவலகத்தில் ஆதாா் எண் இணைக்க ஏற்பாடு

1st Dec 2022 02:25 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் பிஎம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆதாா் எண்ணை இணைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, வேளாண்மை இணை இயக்குநா் நா.வெ.நாகேந்திரன் கூறியதாவது:

பிஎம் கிசான் திட்டத்தில் தகுதியான விவசாயிகளுக்கு 13-ஆவது தவணைத் தொகையை பெற விவசாயிகள் தங்களது ஆதாா் எண்ணை வங்கிக் கணக்கோடு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.

திண்டுக்கல் வட்டாரத்தில் சுமாா் 900 விவசாயிகள் ஆதாா் எண்ணை வங்கிக் கணக்கோடு இணைக்காமல் உள்ளனா். இதேபோல, ஆதாா் அடிப்படையிலான விவரங்களை 1,633 விவசாயிகள் இதுவரை பதிவு செய்யாமல் உள்ளனா். இந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பொது இ-சேவை மையம், தபால் அலுவலகத்தை அணுகி பதிவு செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

திண்டுக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், பிஎம் கிசான் உதவி மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் விவசாயிகள் தங்களது ஆதாா் விவரங்களை டிசம்பா் 5-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT