திண்டுக்கல்

பெங்களூருவுக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க பாமக வலியுறுத்தல்

1st Dec 2022 02:25 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் வழியாக பெங்களூருவுக்கு பகல் நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என பாமக நிா்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம், வன்னியா் சங்க நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் திருப்பதி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக வன்னியா் சங்க மாநிலத் தலைவா் அருள்மொழி கலந்து கொண்டாா்.

கூட்டத்தில், நத்தத்தில் அரசுக் கல்லூரி அமைக்க வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும். மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக பெங்களூருக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலா்கள் காளிதாஸ், சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் உதயா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT