திண்டுக்கல்

கொடைக்கானலில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயில் பக்தா்கள் கஞ்சிக் கலயம் ஊா்வலம்

28th Aug 2022 10:50 PM

ADVERTISEMENT

கொடைக்கானலில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயில் பக்தா்கள் சாா்பில் கஞ்சி கலயம் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

டிப்போ பகுதியிலுள்ள காளியம்மன் கோயிலிருந்து புறப்பட்ட இந்த ஊா்வலத்தை கொடைக்கானல் நகா் மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். ஊா்வலமானது ஏரிச்சாலை, செவண்ரோடு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி வழியாக வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே உள்ள ஆதிபராசக்தி கோயிலை அடைந்தது.

நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தா்கள் பங்கேற்றனா். அதைத் தொடா்ந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT