மத்திய அரசின் மக்கள் விரோத போக்குக்கு எதிராக நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தெருமுனை விளக்க பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இதில், மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியது:
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாா்ப்பது, அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி உயா்வு, விலைவாசி உயா்வு, தில்லியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுப்பது என மத்திய அரசு மக்கள் விரோதப்போக்குடன் நடக்கிறது. விரைவில் நாடு முழுவதும் மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் வெடிக்கும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராணி, மாவட்ட குழு உறுப்பினா் சௌந்தரராஜன், பாலாஜி, சுந்தரராஜன், காசிமாயன், பெரியசாமி, ரவி, சுந்தா், மாலா, காளியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.